fbpx

மாணவர்களே ஜாலி… இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! தமிழக அரசு அறிவிப்பு…!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு சமீபத்தில் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் பொது இடங்களிலும் தேசிய கொடியை ஏற்று வருகின்றனர். வரும் 15ஆம் தேதி அனைத்து மதுபானங்களையும் மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இல்லந்தோறும் மூவர்ண கொடியேற்றும் நிகழ்ச்சியை மத்திய அரசு 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கொண்டாடுகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழா ஆண்டின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய அரசு நாடு முழுவதும் 400 சிறப்பு வாய்ந்த இடங்களில் இதனை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தை மாநில அரசும் வெகு விமர்சையாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Vignesh

Next Post

அப்படி போடு... விவசாயிகளை இனி இதற்கெல்லாம் கட்டாயப்படுத்த கூடாது...! கூட்டுறவு சங்கங்களுக்கு அதிரடி உத்தரவு...!

Sat Aug 13 , 2022
விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருள்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை தமிழகத்தில் உள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கூட்டுறவுத் துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் […]

You May Like