போலியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யும் பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள் இலவசமாகப் பார்வையிடும் வசதியை சில தனியார் செயலிகள் முறையின்றி பயன்படுத்தி வில்லங்க விவரங்களை அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கும் நோக்கில் இனிவரும் காலங்களில் புதிய செயல்முறை அறிமுகம் செய்தது. அதன்படி, சொத்து குறித்த வில்லங்க விவரங்களைப் பார்வையிட விரும்புவோர் ஒருமுறைஉள் நுழையும் குறியீட்டைப் பயன்படுத்தியே இனி பார்வையிடும் வசதியை அறிமுகம் செய்தது.
இந்த நிலையில் தற்போது போலியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யும் பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.