fbpx

குட் நியூஸ்..!மாதவிடாய் காலத்தில் இனி கல்லூரி மாணவிகளுக்கு விடுமுறை…! அட்டகாசமான அறிவிப்பு…!

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்
மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களாகும். அப்போது மாணவிகளின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி வரமுடியாது சூழல் உருவாக்குகிறது. இதை கருத்தில் கொண்டு கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமான பருவத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் 75% வருகைப் பதிவு பெறுவது அவசியம். ஆனால், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களுக்கு 73% சதவீத வருகைப் பதிவு இருந்தாலே போதுமானது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கல்லூரியில் பொதுவாக 75% வருகைப்பதிவு உள்ளவர்களே, இறுதி பருவத்தேர்வை எழுத தகுதியானவர்கள். இதனிடையே, உடல் நலக்குறைவால் விடுமுறை எடுப்பவர்கள் அதற்கு தகுந்த மருத்துவ சான்றிதழை வழங்கி அதற்கான அப்பருவத்தேர்வை எழுத தகுதி பெறும் வாய்ப்புள்ளது. இதில், மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை எடுக்க வாய்ப்பளித்து கூடுதலாக, 2% சதவீதம் தளர்வு அளித்துள்ளது. இதனால், மாணவிகளுக்கு பருவத்தேர்வு எழுத 73% இருந்தாலே போதுமானது. இந்த அறிவிப்பு மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Vignesh

Next Post

ஜாலி...! மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் இங்க வேண்டும்...! அரசின் புதிய அறிவிப்பு...!

Mon Jan 16 , 2023
கடும் குளிர் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் பள்ளி செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ‌‌ உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக, லக்னோவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரங்களை மாற்ற முடிவு செய்துள்ளது. வகுப்புகள் காலை 10 மணிக்குத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு முடிவடையும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ மட்டுமின்றி, கோரக்பூர் மாவட்டத்தின் […]

You May Like