புதுச்சேரி என்றாலே எப்போதும் மதுபானத்திற்கு பேர் போன மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு மதுவிற்கு பெயர்போன புதுச்சேரியில், இந்த மது குறித்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளனர். அந்த வகையில், தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது, புதுச்சேரியில் ஆனந்தபுரம் என்ற கிராமத்தில் ராஜேந்திரன், கலையரசி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியை அடிக்கடி தொந்தரவு செய்திருக்கிறார்.
அந்த வகையில் நேற்று முன் தினம் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த கணவன் ராஜேந்திரன், மனைவியை கொலை செய்துள்ளார். பின்பு, என்ன செய்வது என்று தெரியாமல், அவர் தன்னுடைய மனைவியின் சடலத்தை வீட்டு வாசலில் கொண்டு போய் போட்டுவிட்டு, வீட்டின் பின்புறத்தில் போய் உறங்கி விட்டார். காலையில் கலையரசி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இது குறித்து, காவல்துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே, சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அவருடைய பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கலையரசியின் கணவர் ராஜேந்திரனை விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையை காவல்துறையினர் பார்த்தபோது, கலையரசி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு, காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், பயந்து போன ராஜேந்திரன் உண்மையை ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு, அவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, ராஜேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.