மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கரட்டு குடியிருப்பு குதியைச் சேர்ந்வர் சரவணன் (30). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சுமைதூக்கும் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருடைய மனைவி ஜோதிகா(23). இவா் கட்டட வேலை பாா்த்து வந்தாா். ஜோதிகா வசிக்கும் பகுதியில் கட்டட வேலை நடைபெற்று வந்துள்ளது. அங்கு ஜோதிகா வேலை செய்து வந்துள்ளார்.
கட்டட வேலை செய்யும் இடத்தில் ஜோதிகாவிற்கும் உடப்பன் (21) என்பவரும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரின் தகாத உறவு குறித்தும் சரவணனுக்கு தெரியவந்ததையடுக்கு, ஜோதிகாவை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜோதிகா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உடப்பனுடன் சென்றுவிட்டாா். இதுதொடா்பாக சரவணன் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில், உடப்பன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னா், உடப்பனிடம் இருந்து பிரித்து ஜோதிகாவை மீண்டும் கணவா் சரவணனுடன் சோ்த்து வைத்தனா். கடந்த ஒரு வாரமாக ஜோதிகா கணவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், ஜோதிகா உடப்பனுடன் செல்போன் மூலம் பேசத் தொடங்கியுள்ளது. சரவணன் அதனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ள காதல் ஜோடிகள் தங்களது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த சரவணனைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனா்.
பின்னர், உடப்பன், தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சரவணன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டுக்கு வெளியே நின்றிருந்த ஜோதிகா அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சரவணனை ஜோதிகா உள்பட மூவரும் சோ்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னா், சரவணனின் உடலை துணியால் கட்டி வெளியே கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த நாய்கள் குரைத்ததால் உடலை அங்கேயே விட்டு விட்டு உடப்பனும், 17 வயது சிறுவனும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சப்தம் போட்டுக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த துணிக்குள் சரவணன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக அலங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஜோதிகாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜோதிகா, உடப்பன் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read more ; தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! – வானிலை மையம் தகவல்