fbpx

அதிகமாக டீ குடிப்பவரா நீங்க..!!  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை..

இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், மழை என எந்த பருவநிலையாக இருந்தாலும் இந்திய மக்களில் பெரும்பாலானோர் டீ, குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கடும் வெயில் காலத்திலும் கூட இந்தியாவில் டீக்கடைகளை கூட்டம் நிற்பதை பார்க்கமுடியும்.

நிலைமை இப்படியிருக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் டீ, குடிக்கும் பழக்கம் அளவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீ-யில் காஃபின் (caffeine) கலந்திருப்பதால், அது மத்திய நரம்பு மண்டலத்தையும் மற்றும் உடலியல் சார்புநிலையைத் தூண்டுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் டீ,காபியை முற்றிலுமாக தவிர்க்குமாறு அதில் குறிப்பிடப்படவில்லை. அவற்றில் காஃபின் கலந்திருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபர் 300mg காஃபின் மட்டுமே உட்கொள்ள வேண்டும். தேநீர் மற்றும் காபி அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.அதே போல உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்னும், பின்னும் டீ , காபி அருந்துவதை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த பானங்களில் உள்ள டானின் என்ற பொருள், உணவிலிருந்து நம் உடல் எடுத்துக் கொள்ளும் இரும்புச் சத்தின் அளவை குறைக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பால் கலக்காத தேநீர் குடிப்பது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்றுப் புற்று நோய் அபாயத்தை கட்டுப்படுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயதுடிப்பு தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Read more ; காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு..!!

English Summary

The Indian Council of Medical Research has published a set of 17 dietary guidelines. It is advised to drink tea in moderation.

Next Post

அதிரடி உத்தரவு..! கடையடைப்பு போராட்டத்திற்கு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது...!

Thu Oct 3 , 2024
No one should be forced to join the strike

You May Like