பொதுவாக சிறு குழந்தைகள் என்றால், அவர்களை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள், அதாவது, நம்முடைய கண் பார்வைக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது.
ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்கள் நம் கண் முன்னே இருந்தால் மட்டுமே நம்மால் அவர்களை காப்பாற்ற முடியும். ஆனால் தற்போது தன் முன்னே தன்னுடைய சொந்த மகள் உயிரிழந்ததை தடுக்க முடியாமல் ஒரு தாய் கதறி உள்ளார்.
திண்டுக்கல் அருகே வாசித்து வரும் வீரமணி, தெய்வானை தம்பதிகளுக்கு ஒரு மகள் 13 வயதில் இருக்கிறார் அவருடைய பெயர் நித்யா. அவர் கேரள மாநிலத்தில் இருக்கின்ற ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், அவருடைய சொந்த ஊரான திண்டுக்கல் அருகே இருக்கக்கூடிய பகுதிக்கு திருவிழாவிற்காக வந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு துணிகளை துவைப்பதற்காக நித்யாவின் தாயாரும், நித்யாவும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி குளத்தில் விழுந்தார் சிறுமி நித்யா. இதைப் பார்த்து பதறிப்போன தாய் அவரை காப்பாற்றும் படி கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, சிறுமி நித்யாவின் சடலத்தை மீட்டு உள்ளனர். அதன் பிறகு அவருடைய சடலத்தை வேடசந்தூர் காவல் துறையினரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.