fbpx

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழை… மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 23-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வட ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்‌.

நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.22 முதல் 23-ம் தேதி வரை இலங்கை கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#Scam: தமிழகமே உஷார்... அதிகரிக்கும் மின் கட்டண முறைகேடு...! இதை மட்டும் பண்ணிடாதீங்க...! காவல்துறை அலர்ட்...!

Sat Aug 20 , 2022
போலி குறுஞ்செய்திகளை அனுப்பி நுகர்வோரை ஏமாற்றும் மின்கட்டண மோசடி தமிழகத்தில் தொடர்கிறது, மூத்த குடிமக்கள் உட்பட பலர் இந்த மோசடி வலையில் சிக்குகின்றனர். மோசடி தொடர்பாக சென்னை காவல்துறையில் குறைந்தபட்சம் 56 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதிகபட்சமாக அடையாறு பகுதியில் இருந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற நகரங்களிலும் பல வழக்குகள் உள்ளன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கும் வகையில் […]

You May Like