குழந்தைகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு லேசான வைரஸ் தொற்று கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) ஆகும். காக்ஸாக்கி வைரஸ் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.. குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பல குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை. உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலமும், ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும் இந்த நோயின் அபாயத்தைக் குறைக்க முடியும்.
சிகிச்சை :நோய்த்தொற்று 7 முதல் 10 நாட்களில் மருந்து இல்லாமல் குணமாகும். எனினும் இந்த நோய் தீவிரமடையும் போது, மருத்துவர் குறிப்பிட்ட சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். கொப்புளங்களுக்கு ஆயின்மெண்ட், தலைவலி போன்றவற்றிற்கு வலி நிவாரணி ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது..
அறிகுறிகள் :
- காய்ச்சல்
- தொண்டை வலி
- காய்ச்சல் இருப்பது
- கன்னங்கள், நாக்கு மற்றும் ஈறுகளின் உட்புறத்தில் புண், கொப்புளம் போன்ற புண்கள்
- கைகளில் சிறிய பருக்கள், சிவப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் தடிப்புகள் தோன்றலாம்.
- பசியின்மை