fbpx

பகீர்..!! நடுரோட்டில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை!! பழிக்குப்பழியாக நடந்த சம்பவம்? பின்னணி என்ன?

தஞ்சை அருகே 6 பேர் கொண்ட கும்பல் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீராம் (27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி சின்னா என்கிற பிரின்ஸ் லாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளிவந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை மங்களபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராம் திடீரென அலறி அடித்தபடி தாவிக்குதித்து சாலையில் இறங்கி ஓடி உள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, 6 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீராமை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீஸார் ஸ்ரீராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பரவலாக பழிக்கு பழியாக படுகொலைகள் நடந்து வரும் சூழலில், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more | விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு!! என்ன காரணம்?

English Summary

The next shock in Tamil Nadu… A famous rowdy was hacked to death in the middle of the road; A gang of 6 goes berserk

Next Post

மறைந்த ஆம்ஸ்ட்ராங் வீட்டில் முதல்வர் ஸ்டாலின்..!! மனைவி, குடும்பத்தாருக்கு ஆறுதல்..!!

Tue Jul 9 , 2024
Chief Minister M.K.Stalin personally met the family of Bahujan Samaj Party state president Armstrong and expressed his condolences.

You May Like