fbpx

பிரசவத்திற்குபின் பெண்ணின் வயிற்றில் இருந்த பொருள்!. மருத்துவரின் பகீர் செயல்!. உறவினர்கள் அதிர்ச்சி!.

Karnataka: கர்நாடகாவில் பிரசவத்திற்கு பிறகு பெண்ணின் வயிற்றி பஞ்சு மற்றும் துணியை வைத்து செய்த மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் முகலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி ராஜு. கர்ப்பிணியான இவர், இம்மாதம் 7ம் தேதி சிக்கோடி மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் சில நாட்கள் இருந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களில் ஸ்ருதிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. உடனடியாக ஹூக்கேரி தாலுகா மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் துணி, பஞ்சு வைத்து தைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவை அகற்றப்பட்டன. பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிப்., 7ல் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்தது உண்மை தான். இது தொடர்பாக ஹூக்கேரி சுகாதார அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரசவம் பார்த்த டாக்டர்களிடம் கேட்டுள்ளேன். இவ்விஷயத்தில் டாக்டரின் அலட்சியம் தெரியவந்தால், மூத்த அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன். இனி இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர்.

Readmore: 17வயதில் தங்கப் பதக்கம்!. மல்யுத்த வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா மரணம்!. பயிற்சியின்போது நிகழ்ந்த சோகம்!

English Summary

The object found in the woman’s stomach after childbirth!. The doctor’s shameful act!. Relatives shocked!.

Kokila

Next Post

கொசுக்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பரிசுகளை வழங்கும் பிலிப்பைன்ஸ் கிராமம்!. ஏன் தெரியுமா?

Thu Feb 20 , 2025
A Philippine village offers prizes to those who catch mosquitoes! Do you know why?

You May Like