fbpx

யாரும் மறக்காதீங்க… மாநிலக் கல்விக் கொள்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் மேலும் நீடிப்பு…!

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் மட்ட குழுவின் உறுப்பினர் செயலாளர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளர்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மாநில கல்வி கொள்கை உயர் மட்ட குழு, centre of excellence building,3 வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025 என்ற முகவரிக்கும் செப்டம்பர் 15-ம் தேதி வரை கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.

மாநில கல்விக் கொள்கை குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. மேலும், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறும் பொருட்கள் நடத்திடுவும் மாநில கல்வி குழு வேர் மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செப்டம்பர் 21 ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கருத்துக்களை கூற விரும்புபவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்டு கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே... இனி அனைவருக்கும் வரப் போகிறது புதிய ஹெல்மெட்...! முழு விவரம் உள்ளே...

Tue Aug 23 , 2022
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய காற்றினை சுவாசிக்கும் விதமாக ஹெல்மெட் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த புதிய தொழில் நிறுவனம் தயாரித்துள்ள, மாசு எதிர்ப்பு தலைக்கவசம், இருசக்கர வாகன ஓட்டிகள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவுகிறது. ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஹெல்மெட்டில், புளூடூத்துடன் இணைக்கப்பட்ட செயலி உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது. அறிவியல் […]

You May Like