fbpx

தேர்வு கிடையாது.. ரேஷன் கடைகளில் 2,000 காலிப்பணியிடங்கள்..!! – ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . சென்னையில் மட்டும் மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி : விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்களிடமிருந்து www.drbchn.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனச்சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப் பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். மேலும், தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம் : விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

Read more ; நடிகை பானுப்பிரியாவுக்கு இப்படி ஒரு நோயா..? நிலைமை ரொம்ப மோசம்..!! கண்ணீர் மல்க பேட்டி..!!

English Summary

The posts of Salesman and Builders are being filled in Ration Shops running under Co-operative Societies across Tamilnadu.

Next Post

கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் காலமானார்..!! - தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் இரங்கல்

Thu Oct 10 , 2024
Karunanidhi's son-in-law Murasoli Selvam passed away..!! - Leaders, journalists condole

You May Like