நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில்; நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அவரவர் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை நாட்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 2022 ஆகஸ்ட் 7, 9 மற்றும் 14 தேதிகளில் அஞ்சல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடிகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.