fbpx

மோசடியா பண்றீங்க…….? கொந்தளித்த மாநில அரசு…..! 9500 ரேஷன் கார்டுகள் அதிரடி ரத்து……! அடுத்தது என்ன நடக்கும்……..?

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும், அனைத்து ரேஷன் கடைகளிலும், அனைத்தும் சரியாக நடக்கிறதா? என்று நேரில் சென்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தி, தவறு நடைபெற்றிருந்தால், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இலவச எண்ணின் மூலமாகவும், தொடர்பு கொண்டு, புகார் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதுஇந்த ரேஷன் கடைகள் மூலமாக நாடு முழுவதும் இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும், அரிசி, பருப்பு, சர்க்கரை, உளுந்து, மண்ணென்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி மத்திய, மாநில அரசுகளால் இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் பயனாளிகளை சென்று சேர்வதில் ஏற்படும் குளறுபடிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. அதாவது, பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டு, வாங்கி விட்டதாக எஸ்எம்எஸ் அனுப்புவது, வாங்கும் பொருட்களுக்கு எடை குறைவாக இருப்பது, ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது என்று பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், இப்படிப்பட்ட குழப்பம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக, நிச்சயமாக பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 9500 பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பயனாளிகள் உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநில நுகர்வோர் பட்டியலில், தங்களுடைய பெயரை பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வாங்கி வந்த சூழ்நிலையில், தற்சமயம் 9,500 பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிரடியாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கின்ற பயனர்களின் விவரங்களை ஆய்வு செய்து வரும் சூழ்நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல்களும் கிடைத்திருக்கிறது.

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு..!! பொதுத்தேர்வு சான்றிதழ்களை லேமினேஷன் செய்யக்கூடாது..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

Sat Aug 5 , 2023
பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மாறும்போது டிசி எனப்படும் மாற்று சான்றிதழ் வழங்கப்படும். அதனை தவிர 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. அந்த […]

You May Like