பஞ்சாப் மாநில பகுதியில் ஒரு இரயில்வே நிலையத்தில் சூட்-கேஸ் பெட்டி ஒன்று ஓரமாக இருந்துள்ளது. முதலில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு வெகு நேரமாகியும் அந்த பெட்டி அங்கேயே இருந்ததால் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கே வந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சூட்கேஸில் 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது . அதன் பிறகு சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனை பற்றி ரயில்வே உதவி கமிஷ்னர் கூறுகையில் , சிசிடிவி காட்சிகளில் திங்கள்கிழமை ஒரு நபர் அந்த சூட்கேஸை வைத்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.