fbpx

புது ரூல்ஸ்: இனி ஆசிரியர்களுக்கு இது கட்டாயம் இல்லை…! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..‌.!

ஆசிரியர்கள் பாட குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பின்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இதுவரை ஆசிரியர்கள் பராமரித்து வந்த கருவூலப்பதிவேடு, சம்பளப் பிடித்தப் பதிவேடு, நிலுவை சிறப்பு கட்டணப்பதிவேடு உள்ளிட்ட 11 வகையான பதிவேடுகளை பராமரிக்கத்தேவையில்லை.

மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை அமல்படுத்துகின்ற ஆசிரியர்கள், பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும்; வேறு எந்த பதிவேடுகளையும் பராமரிக்கத்தேவையில்லை. குறிப்பாக, 4 முதல் 12-ம் வகுப்பு வரையான வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள், பணிப்பதிவேடு மற்றும் பாடத்திட்டப் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிர்ச்சியில் தமிழகம்... 36 மணி நேரத்தில் 15 கொலைகள்‌...? அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

Thu Aug 25 , 2022
தமிழகத்தில் கடந்த 34 மணி நேரத்தில் 12 கொலைகள்‌ மட்டுமே நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது இது கறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்து36 மணி நேரத்தில்‌ 15 கொலைகள்‌ நடந்ததாக சில ஊடகச்‌ செய்திகளில்‌ மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில்‌ 22.08.2022 அன்று 7 கொலைகளும்‌, 23.08.2022 அன்று கொலைகள்‌ மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில்‌ பட்டியிலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள்‌ ஆகஸ்ட்‌ […]

You May Like