fbpx

சூப்பர் நியூஸ்… தமிழக அரசால் இவர்களுக்கு இலவச வீடு வழங்கப்படும்…! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும் 1000 வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதால், 2022 – 2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும் 1,000 புதிய வீடுகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

இதனை செயல்படுத்தும் வகையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி மற்றும் திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில், சமதளப்பரப்பில் ஒரு வீட்டிற்கு ரூ.4,37,430 வீதம் 726 வீடுகளுக்கு ரூ.31,75,74.180 என்வும், மலைப்பகுதியில் ஒரு வீட்டிற்கு ரூ.4,95,430 வீதம் 368 வீடுகளுக்கு ரூ.18,23,18,240 என மொத்தம் 1,094 வீடுகள் கட்டுவதற்கு ரூ.49,98,92,420 நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருந்து ரானிடிடைன் உள்ளிட்ட 26 மருந்துகள் நீக்கம்.. புற்றுநோய் அச்சம் காரணமாக நடவடிக்கை..

Wed Sep 14 , 2022
புற்றுநோயை உண்டாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருந்து பிரபலமான ஆன்டாக்சிட் சால்ட் ரானிடிடைன் மாத்திரையை மத்திய அரசு நீக்கியுள்ளது. 384 மருந்துகளைக் கொண்ட புதிய தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலை சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டது. அதில் ஆன்டாக்சிட் சால்ட் ரானிடிடைனை மத்திய அரசு நீக்கியுள்ளது. 26 மருந்துகள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.. இதையடுத்து […]

You May Like