fbpx

குட் நியூஸ்…! 10 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறை தேதி அறிவிப்பு…!

அரையாண்டு தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு விடுமுறைக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் பருவமான அரையாண்டு தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு விடுமுறைக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 16ம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெறுகின்றது. தேர்வுகள் முடிவடைந்ததும் டிசம்பர் 25ம் தேதி அரையாண்டு தேர்வுக்கான விடுமுறைகள் தொடங்குகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் நிறைவடைந்ததும் ஜனவரி 2ம் தேதி வியாழன் கிழமை முதல் மூன்றாம் பருவத்திற்கான பாடங்கள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ம் தேதியும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு 10 முதல் 12-ம் வகுப்பு வரை கேள்வித்தாள்களை மண்டல அளவில் உள்ள பள்ளியில் இருந்து பெற்று செல்ல வேண்டும். அதற்காக பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்து கேள்வித்தாள்கள் பெற்றுச் செல்ல வேண்டும்.

English Summary

The Tamil Nadu School Education Department has released the dates for the half-yearly exams and the dates for the exam holidays.

Vignesh

Next Post

மாதம் ரூ.25,500 சம்பளத்தில் வேலை..!! தேர்வு எழுத தேவையில்லை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sat Nov 23 , 2024
Rail India Technical and Economic Service (RITES) has issued a new notification regarding employment.

You May Like