fbpx

சூப்பர் அறிவிப்பு… விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு.. சொந்த ஊருக்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள்…! அமைச்சர் தகவல்…!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி கல்லூரி என அனைவருக்கும் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது‌. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வரும் விதமாக அரசு சார்பில் சிறப்பு போக்குவர த்து பேருந்து இயக்கப்படும் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி, சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடுத்த ஆப்பு... இனி வாகனங்களில் பெட்ரோல், டீசல் அளவாக பயன்படுத்த வேண்டும்...! அரசு போட்ட அதிரடி உத்தரவு...!

Wed Aug 31 , 2022
காவல்‌ வாகளங்களிள்‌ பயன்பாட்டிற்கு ஏற்ப பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணைவழங்கப்பட்டுள்ளது. இது குறித்த காவல்துறை தலைமை இயக்குனர் வெங்கடா ராமன் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று அறிக்கையில் எரிபொருள்‌ விலை உயர்வினையும்‌ தற்போதைய எரிபொருள்‌ நெருக்கடிகளையும்‌ கருத்திற்‌ கொண்டு எரிபொருள்‌ சிக்கனத்தை மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ வலியுறுத்தி வருகின்றன. மேலும்‌ அரசு நிர்ணயம்‌ செய்துள்ள அளவைவிட அதிக எரிபொருள்‌ பயன்படுத்தினால்‌ […]

You May Like