fbpx

’கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு அரசியல் காரணங்கள் கூட இருக்கலாம்’..! அன்புமணி ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியிருப்பதும், காவல்துறை சரக துணைத்தலைவர் காயமடைந்திருப்பதும் கவலையளிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நிலைமையை இந்த அளவுக்கு மோசமாக்கிய காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. மாணவி மர்ம மரணம் அடைந்த நிலையில், அதற்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

’கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு அரசியல் காரணங்கள் கூட இருக்கலாம்’..! அன்புமணி ராமதாஸ்

பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறு இல்லை என்று தெரியவந்திருந்தால் உண்மையை பெற்றோரிடம் விளக்கி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், இதை செய்ய காவல்துறை தவறிவிட்டது. சின்ன சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்களோ, மாணவியின் நெருங்கிய உறவினர்களோ இல்லை. வெளியூரிலிருந்து திட்டமிட்டு வந்தவர்கள் தான் கலவரத்தை நடத்தியதாக தெரிகிறது. 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளியூரிலிருந்து வந்து திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய நிலையில், அதை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே அறிந்து காவல்துறை தடுத்திருக்க வேண்டும்.

’கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு அரசியல் காரணங்கள் கூட இருக்கலாம்’..! அன்புமணி ராமதாஸ்

ஆனால், காவல்துறை வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படும் வரை கலவரத்தின் தீவிரம் காவல்துறையினருக்கு தெரியவில்லை. அவற்றைத் தடுப்பதற்கு அந்தப் பகுதியில் காவலர்களே இல்லை. அந்த அளவுக்கு அங்கு காவலர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்துள்ளது. நிலைமையை கணிக்க உளவுத்துறை தவறியது தான் இந்த கலவரத்திற்கு முதன்மையான காரணமாகும். இந்த கலவரத்தின் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

’கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு அரசியல் காரணங்கள் கூட இருக்கலாம்’..! அன்புமணி ராமதாஸ்

இந்த விஷயத்தில் காவல்துறையினர் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பின்னணியில் இருந்து கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவியின் மர்மச்சாவு குறித்தும் விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

போராட்டம் தீப்பற்றி எரியும் நிலையில்... போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பு...!

Sun Jul 17 , 2022
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17). ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் சின்னசேலம் லில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். , இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் […]
கள்ளக்குறிச்சி கலவரம்..! யூடியூப் சேனல்களை முடக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like