தமிழக அரசின் வருவாயை பெருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்து சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட வேண்டும்.
விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவு விதி-4-க்கு உட்பட்டு பதிவுச் சட்டத்தில் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படவேண்டும். மேலும் அன்றைய தினங்களில், ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான Help Desk மற்றும் Help Line வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட M/s TCS மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.