fbpx

3 படத்தில் இந்த நடிகர் நடிக்க தடை போட்ட சிம்பு..!! சிவகார்த்திகேயன் செய்த காரியம்..!! தனுஷ் கோபத்திற்கு இதுதான் காரணம்..!!

நடிகர் தனுஷூக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே விழுந்த விரிசல் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், ”நடிகர் தனுஷ் 3 படத்தை எடுக்கும்போது அந்தப் படத்தில், நகைச்சுவைக்கென்று ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சந்தானத்தை கமிட் செய்திருந்தார் தனுஷ். ஷூட்டிங் இரண்டு, மூன்று நாட்கள் நடந்து இருக்கும், திடீரென்று சிலம்பரசன் சந்தானத்தை அழைத்து, அப்படத்தில் நடிக்கக்கூடாது. விலகி விடுங்கள் என்று சொல்லி விட்டாராம்.

விஜய் டிவியில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சிம்பு தான். அந்த விசுவாசத்திற்கான பிரதிபலனாக சந்தானம் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். திடீரென்று அவர் விலகிய பின்னர் தனுஷ் தற்போது அந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் சிவகார்த்திகேயனின் பெயர் அவரது காதிற்கு வருகிறது. தனுஷ் தரப்பில் இருந்து சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்கிறார்கள். சிவகார்த்திகேயன் அப்போது மெரினா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அந்த படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், 3 படத்தில் கமிட்டாக வேண்டாம். ஏனென்றால், மெரினா திரைப்படத்தில் ஹீரோ வேஷம். அந்த திரைப்படத்தில் காமெடி வேஷம். அந்தப் படத்தில் நீ நடித்தால், உன்னை காமெடியனாகவே முத்திரை குத்தி விடுவார்கள். ஆகையால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் முழு கவனத்தை செலுத்து என்று அறிவுரை கூறினார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. சிவகார்த்திகேயன் 3 படத்தில் கமிட் ஆகிவிட்டார். 3 படம் வெளியானது.

திரையரங்கில் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கைத்தட்டி கொண்டாடினர். இதையடுத்து, தனுஷ் சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு கூட்டம் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதை கரெக்ட்டாக கணித்து, அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த திரைப்படம் தான் எதிர்நீச்சல். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. காலப்போக்கில் நாம்தான் சிவாவை ஹீரோவாக்கி இருக்கிறோம். ஆகையால், அவர் தன் பேச்சைக் கேட்டு தன் கைக்குள் இருப்பார் என்று தனுஷ் எதிர்பார்த்தார். ஆனால் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து, தனுஷை அவர் நிராகரிக்கும் இடத்திற்கு சென்று விட்டார்.

இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் தனுஷின் அலுவலகத்திற்கு எதிரே, சிவகார்த்திகேயன் ஒரு அலுவலகம் வைத்திருக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். சினிமா அப்படித்தான் அவரை உருவாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இது அமைதிப்படை அமாவாசை கதை போலதான்” என்று பேசினார்.

Read More : இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா..? அலட்சியம் காட்டிய நபருக்கு நிகழ்ந்த சோகம்..!! மருத்துவர் எச்சரிக்கை..!!

English Summary

Famous journalist Bismi has spoken to a YouTube channel about the rift between actor Dhanush and Sivakarthikeyan.

Chella

Next Post

'ஒட்டுமொத்த நகரமும் ஒரே கட்டிடத்தில்..!' எந்த தேவைகளுக்காகவும் வெளியவே வராத மக்கள்!! ஏன் தெரியுமா?

Tue May 28 , 2024
அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் உள்ள ஒரு முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது. விட்டியர் என அழைக்கப்படும் நகரத்தில் தான் அந்த கட்டடம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு மாகானத்தில் முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. உண்மை தான். விட்டியர் என அழைக்கப்படும் இந்த நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர். இந்த கட்டத்தில் சுமார் 700-க்கும் அதிகமானோர் வசிக்கலாம். 1956-ல் […]

You May Like