fbpx

கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.. இது ஆரம்பம்தான்… நடவடிக்கைகள் தொடரும்!! அதிரடி காட்டும் அண்ணாமலை…!!

தமிழக பா.ஜ.க.வில் களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக கூறி உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது ஆரம்பம்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ பா.ஜ.க.வின் லட்சுமண ரேகையை மீறினால் நடவடிக்கை உறுதி.. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. தற்போது ஆரம்பக்கட்டம்தான். வரும் காலத்தில் இன்னும் பயங்கரமாக இருக்கும். இன்னும் அதிரடி நடவடிக்கைகள் தொடரும். பாரதிய ஜனகா கட்சி நாகரிகமான அரசியல் செய்து வருகின்றது. சூர்யா, சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டிருக்கின்றேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை. தவறு செய்தால் உறுதியாக நடவடிக்கை பாயும்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பா.ஜ.க. வரவேற்கின்றது. முழுமையாக ஆதரிக்கின்றது. அதிமுகவுடன் கூட்டணி தொடரும். பா-ஜ.க. கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா என்பது தொடர்பான கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக பா.ஜ.க. தொடரந்து குரல் எழுப்பி வருகின்றது. தமிழக பா.ஜ.க. பேருந்து போலதான். பழையவர்களைஇறக்கிவிட்டால் புதியவர்கள் ஏறமுடியும்.. என தெரிவித்தார்.

Next Post

நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000… ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்…

Wed Nov 23 , 2022
கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து நாளை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதில், சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு பின்னர் 44 செ.மீ. மழை பதிவானது. இதில் பல வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like