கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றை விட, தற்போது கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
ஆகவே, இதனை கட்டுப்படுத்துவதற்கு, அந்த மாநில சுகாதார துறையும், மாநில அரசும், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, கேரள மாநில மக்களுக்கு கேரள மாநில அரசும், சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின்போது கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவேளை, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தையும் தற்போதும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றை விட இந்த நிபா வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அத்துடன் மட்டுமல்லாமல், இந்த தொற்றில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்று ஐ.சி.எம்.ஆர் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிபா வைரஸ் காரணமாக, கேரள மாநிலத்தில் இதுவரையில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள். ஆகவே, இந்த வைரஸை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது. அதோடு, இந்த நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், கேரள சுகாதாரத்துறை மிகவும் உன்னிப்பாக, கண்காணிப்பை செய்து வருகிறது.
அதோடு, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள மற்ற நபர்களுக்கும் இந்த நோய் இருக்கிறதா? என்ற பரிசோதனையை கேரள மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. அப்படி இந்த நோயால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.
அதோடு கேரள மாநிலத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களுக்கு இந்த நோய் தொற்று பரவல் சென்று விடக்கூடாது என்பதிலும், அந்த மாநில அரசு கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறது. அதனால், மாநில எல்லைகளில் இந்த வைரஸ் பற்றிய பரிசோதனை தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஐ.சி.எம்.ஆர் தெரிவித்ததாவது, இந்த வைரஸ் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவைப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது தற்போது இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன், தொடர்பில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த நோய் தொற்று புதிதாக யாருக்கும் உருவாகவில்லை என்றும், ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டும் தான் இந்த நோய் ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.