ஒரு கல்லூரி மாணவிக்கு அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரே பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அதோடு, மட்டுமல்லாமல், அந்த மாணவியின் தாயாருக்கும் அந்த பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.
இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், பேராசிரியராக லியோ ஸ்டான்லி. என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தான், அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கும், அவருடைய தாயாருக்கும் பேராசிரியர் ஸ்டான்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, அந்த கல்லூரி நிர்வாகத்திலும் கல்லூரி மாணவியின் தாயார் புகார் வழங்கியிருக்கிறார். ஆனாலும், அந்த புகார் மீது கல்லூரி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
தாய் வழங்கிய புகார் மீது, கல்லூரி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தால், அந்த கல்லூரி மாணவி, மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் சரியான நேரத்தில், அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டார். அதோடு, இந்த விவகாரம் குறித்து, கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அந்த மாணவிக்கும், அவருடைய தாய்க்கும் பேராசிரியர் ஸ்டான்லி பாலியல் தொல்லை வழங்கினார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கல்லூரி பேராசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்