காதலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், காதலி நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று திட்டியதால், மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (25). இவர் தற்சமயம் பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே இருக்கின்ற சிவநாதபுரத்தில் விசைத்தறி கூடத்தில், வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திகேயன், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இந்த நாள்தோறும் குடித்துவிட்டு, தன்னுடைய காதலிக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி, நீ இப்படி குடித்துவிட்டு, குடிக்கு அடிமையாக இருந்தால், நான் எப்படி உன்னை திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
ஆகவே கார்த்திகேயனின் காதலி இவ்வாறு கூறியதால், மனமுடைந்து காணப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான், வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து, மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இந்த சம்பவம் தொடர்பாக, வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.