fbpx

#Tn Govt: வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை.‌‌..! விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்…!

படித்த வேலைவாய்ப்பற்ற நபர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை‌. இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு 1,000 ரூபாய் அரசால் வழங்கபடுகிறது.

இந்த திட்டத்தில் தகுதியுடைய படித்த வேலை வாய்ப்பு இல்லாத நபர்கள் உதவி தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நீங்கள் பெற்று கொள்ளலாம். கல்வித்‌ தகுதியினை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று‌. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல்‌ இருக்க வேண்டும்‌. பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌, கால்நடை, அறிவியல்‌ இது போன்ற தொழில்நுட்பப்பட்டம்‌ பெற்றவர்கள்‌ இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்‌.

இதற்கு நீங்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ சேர்த்து இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 பணம்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..

Fri Sep 30 , 2022
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 […]

You May Like