fbpx

ரேஷன் கார்டுதார்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசின் சூப்பரான அறிவிப்பு.!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மின்னணு குடும்ப அட்டையில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது .

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது வசதிப்படி நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குடும்ப அட்டைகாரர்களை ரேஷன் கடைக்கு வரவழைத்து அவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் குடும்ப அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தி நியாய விலை கடைக்கு வரவழைத்து கைரேகை பதிவு செய்யக்கூடாது. அவர்கள் வசதி படக்கூடிய நேரத்தில் நியாய விலை கடைகளுக்கு வந்து கைரேகை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கைரேகை பதிவு செய்யும் குடும்ப அட்டைதாரர்களிடம் ஆவணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்படாது என தமிழக அரசு முன்னர் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிரமங்களை மக்களுக்கு நீக்குவதற்காக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Next Post

"உங்கள் இதயத்துடிப்பு கூட துல்லியமாக கேட்கும்.." உலகில் சத்தமே கேட்காத ஒரு அறை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா.?

Sun Feb 11 , 2024
கம்ப்யூட்டர் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின், மற்றும் ஒரு சாதனைகளில் ஒன்றாக இருப்பது அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகவும் அமைதியான அறையாகும். இந்த அறை உலகின் மிக அமைதியான அறையாக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்டின் தலைமையகத்தில் அமைந்திருக்கிறது. முற்றிலும் ஒலிப்புகாத பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த அறையின் கட்டுமான பணிகள் […]

You May Like