fbpx

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் நீங்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆகலாம்! உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வாட்ச்மேன், டைப்பிஸ்ட், எலக்ட்ரீசியன் மற்றும் கிளீனர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி மேல் கண்ட பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பில் டைப்பிஸ்ட் பணிகளுக்கு பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். எலக்ட்ரீசியன் பணிகளுக்கு ஐடிஐ படிப்பில் எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வாட்ச்மேன் மற்றும் கிளீனர் பணிகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் உச்சபட்ச வயது வரம்பு 45 ஆகும் இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை தகுதிக்கேற்ப வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு ஆஃப்லைன் முறையில் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ்களை செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்கோயில், திருச்சிராப்பள்ளி – 620005. இந்த முகவரிக்கு 11..05.2023 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பினைப் பற்றிய பிற தகவல்களை அறிய hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Rupa

Next Post

எம்.எஸ்சி படித்தவர்களா நீங்கள்?... பாரதிதாசன் பல்கலை.யில் வேலை!... மாதம் ரூ. 31,000 வரை சம்பளம்!

Fri Apr 14 , 2023
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate-I பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி – எம்.எஸ்சி படித்திருக்கவேண்டும். சம்பளம் – மாதம் ரூ.25000 முதல் ரூ.31000 வரை இருக்கும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி – https://bdu.ac.in/-ல் அறிந்துக்கொள்ளவும். முகவரி – Bharathidasan University, Palkalaiperur, […]

You May Like