முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையெட்டி சேலம் மாவட்டத்தில் இன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டம் தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன் பெறும்வகையில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.
அந்த வகையில் சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி பகுதியிலுள்ள மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜலகண்டாபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெங்கவல்லி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேச்சேரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏற்காடு, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.