fbpx

தொடர்ந்து சரியும் தக்காளியின் விலை…..! தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…..!

தமிழகத்தில் தற்போது தற்காலியின் விலை வெகுவாக குறைந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது, தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், காய்கறி விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த விதத்தில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு, 150 ரூபாய் வரையில், விற்பனை செய்யப்பட்டது.

பிறகு இந்த கிடு,கிடு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தமிழக நியாய விலை கடைகளின் மூலமாக, பொதுமக்களுக்கு தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு, 60 ரூபாய் என்ற நிலையில், விற்பனை செய்யப்பட்டது. நாள்தோறும், தக்காளியின் விலை 10 ரூபாய் என்ற அளவுக்கு குறைந்து, தற்போது, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரையில் விற்பனையாகி வருகின்றது.

அத்துடன், தரமான தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு, 60 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில், தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு, ரூ 20 ரூபாய் வரையில் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக, தக்காளி வியாபாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Post

சென்னை வாழ் மக்களே உங்களுக்கான ஒரு அருமையான வேலை வாய்ப்பு….! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்….!

Sun Aug 13 , 2023
சென்னையில் வாழும் மக்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் காலியாக இருக்கின்ற பணியிடம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, சென்னை கிண்டியில் இருக்கின்ற வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் 6️ அலுவலக உதவியாளர் மற்றும் 2 காவலர் பணியிடங்கள் என்று ஒட்டுமொத்தமாக 8 காலி […]

You May Like