fbpx

வரும் 27-ம் தேதி வரை கட்டாயம்…! 6 முதல் 10- ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு…!

6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (CRC) – SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு மாதந்தோறும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் (CRC) பயிற்சியானது 6 முதல் 8 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியாக மாநில அளிவில் 09.10.2023 & 10.10.2023 ஆகிய நாட்களிலும் மாவட்ட அளவில் 12.10.2023 & 13.10.2023 ஆகிய நாட்களிலும் மற்றும் வட்டார அளவில் 16.10.2023, 17.10.2023 & 18.10.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும்.

மேலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது மாநில அளவில் 16.10.2023 & 17.10.2023 ஆகிய நாட்களிலும் மாவட்ட அளவில் 19.10.2023 & 20.10.2023 ஆகிய இரு நாட்களிலும் மற்றும் வட்டார அளவில் 25.10.2023, 26.10.2023 & 27.10.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். இப்பயிற்சியில் மதிப்பீடு. வாசிப்பு இயக்கம் மற்றும் சிறார் இதழ்கள் குறித்த பொருண்மைகளில் பயிற்சியினை அளித்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Vignesh

Next Post

மாஸ் அறிவிப்பு...! விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு...! தமிழக அரசு அதிரடி

Fri Oct 6 , 2023
மாநில, தேசிய அளவிலான விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பிறகு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் […]

You May Like