fbpx

இன்று முதல் தொடங்கும் பயிற்சி வகுப்பு…! ஆசிரியர்கள் காலை 6 முதல் 8 மணிக்குள் வர வேண்டும்…! முழு விவரம்

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று முதல் மதுரையில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளது அறிவிப்பில்; நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வல்லுநர்கள் மற்றும் முதன்மைக் கருத்தாளர்களைக் கொண்டு இன்று முதல் 27.04.2024 முடிய நடப்புக் கல்வியாண்டில் 40 தொகுதிகளாக (40 Batches) மதுரை மாவட்டம், பில்லர் சாலை, நாகமலைப்புதுக்கோட்டை, பில்லர் மையத்தில் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளை பின்பற்றும் வகையில் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிவாரியாக நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டின்படி பயிற்சி தொடங்கும் நாளுக்கு முதல் நாள் இரவு 8.30 மணிக்குள்ளாகவோ அல்லது பயிற்சி தொடங்கும் நாளன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள்ளாகவோ பயிற்சி மையத்திற்கு வருகை புரிய வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தங்கும் இடவசதி மற்றும் உணவு வசதி ஆகியன ஏற்பாடு செய்து தரப்படும்.

பயிற்சி தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் இரவு 9 மணி வரை மட்டுமே இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில் பயிற்சி மையத்தை விட்டு வெளியே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும் பில்லர் மையத்தில் இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை யாரும் உள்ளே வரவோ அல்லது வெளியே செல்லவோ அனுமதி கிடையாது.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூன்று நாட்கள் பயிற்சி நிறைவடைந்த பிறகு மாலை 7 மணிக்கு பின்னரே பயிற்சி வளாகத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படுவர். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி நாட்களுக்கு மாற்றாக வேறு நாட்களில் பயிற்சியில் பங்கேற்க, ஒரு தலைமை ஆசிரியருக்கு மாற்றாக மற்றொரு தலைமை ஆசிரியர் பங்கேற்க அனுமதி கேட்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கால் அட்டவணையின்படி உரிய தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’பால் கொள்முதல் விலை உயர்வு’..!! அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

Thu Oct 5 , 2023
அதிக கொழுப்புச் சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துகள் அடிப்படையில் கொள்முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அதிகபட்சமாக கொழுப்பு 5.9% மற்றும் இதர சத்துகள் 9% உள்ள பாலுக்கு லிட்டருக்கு ரூ.40.95 […]

You May Like