தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் அலுவாவில் உள்ள வாழக்குளத்தில் அமைந்துள்ள அதன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒருநாள் பயிற்சி முதல் நான்கு நாள் பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தேங்காய் சிப்ஸ், பிஸ்கெட்டுகள், சாக்லெட், சட்னி பவுடர், தேங்காய் பர்ஃபி, ஊறுகாய், ஜாம் போன்ற பொருட்களை தயாரிக்க இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வினிகர் மற்றும் நாடா டி கோகோ தயாரிக்கும் ஒருநாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சுவையூட்டப்பட்ட தேங்காய்ப் பால், வேர்களின் அடிப்படையிலான உற்பத்தி பொருட்கள், இளநீர் ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத்தைப் பயிற்சியாளர்கள் பெறலாம்.
இந்தப் பயிற்சி பெற விரும்புவோர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை 0484-2679680 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பதிவு, கட்டணம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான விவரங்களுக்கு cit-aluva@coconutboard.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.