fbpx

இயற்கை உபாதைக்கு சென்ற இரண்டு பெண்கள் பலாத்காரம்.. அதிர்ச்சியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் இரண்டு பெண்கள் மலம் கழிக்க வெளியே சென்றுள்ளனர். செல்லும் வழியில், லால்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர். இரண்டு பெண்களையும் அவர்கள் வலுக்கட்டாயமாக காட்டிற்கு அழைத்து சென்று அங்கு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு நினைவு திரும்பவும், வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். பதறிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் அங்கு இல்லை..சம்பவத்திற்கு மறு நாள் அதே காட்டில் ஒரு பெண்ணின்சடலம் மரத்தில் தொங்கிக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் துப்பட்டாவால் தூக்கில் இடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான அதிர்ச்சியில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Read more ; பிக்பாஸில் நடந்த அதிரடி மாற்றம்..!! 24 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டது இந்த போட்டியாளரா..?

English Summary

Two friends went out to defecate, an incident happened in the forest. the next day the body of one of them was found hanging from a tree.

Next Post

சற்றுமுன்...! வடகிழக்கு பருவ மழை தொடர்பான புகார்களுக்கு 1914 என்ற எண் அறிமுகம்...!

Mon Oct 7 , 2024
No. 1914 introduced for complaints related to North-East Monsoon rains

You May Like