fbpx

#Udhay: அமைச்சர் பதவி உறுதி செய்த ஆளுநர் மாளிகை…! ஆனால் அதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்த ஸ்டாலின்…!

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் பெறுவார் என அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பொழுது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இரண்டாவது தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சக அமைச்சர்களின் வரிசையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணி அளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார் என ஆளுநர் மாளிகையும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

Vignesh

Next Post

காதலர்கள் காருக்குள் முத்தம் கொடுப்பது குற்றமா? சட்டம் சொல்வதென்ன?

Tue Dec 13 , 2022
இந்தியாவில் காருக்குள் வைத்து ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கோ அல்லது ஒரு பெண் ஆணிற்கோ முத்தம் கொடுத்தால் அது இந்திய சட்டப்படி தவறான ஒரு விஷயம் ஆகும். என்னது இந்தியாவில் காரில் முத்தமிடுவது குற்றமா..? என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம். அது தொடர்பான சட்ட விதியை பார்க்கலாம். உண்மையில், காரில் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது குறித்து நேரடி சட்டம் எதுவும் இல்லை. ஆனால், […]

You May Like