2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி விதை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.3,750 ரூ.6,760 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோயா பீன்ஸ் ஒரு குவிண்டால் 2,560 ரூபாயிலிருந்து 4,600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2021-22-ஆம் ஆண்டைவிட 14.9 மில்லியன் டன் அதிகமாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக உற்பத்தி இதுவாகும்.