fbpx

வெளிநாட்டுக் கணவரை மகன், மகளுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி.! அம்பலமானது நாடகம்.!

வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம், மனைவி தீபா மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மகன் புஷ்பநாதன் 12ம் வகுப்பு மற்றும் மகள் கலைவாணி(15) பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆறுமுகம் சுமா‌ர் 13 ஆண்டுகள் வெளிநாட்டு வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு மீண்டும் வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த 7-ம் தேதி ஆறுமுகம் இறந்ததாக கூறப்படுகிறது.

இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு ஆறுமுகத்தின் உறவினர்கள் வேப்பூர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆறுமுகம் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவி மீது சந்தேகப்பட்டு குடும்பத்தில் பிரச்னை நடந்த நிலையில், அதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இரவு கணவர் மது போதையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டுள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி தீபா மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூவரும் சேர்ந்து ஆறுமுகத்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

மேலும் ஆறுமுகம் இயற்கையாகவே மரணம் அடைந்து விட்டார் என நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் தீபா மற்றும் அவரது பிள்ளைகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Rupa

Next Post

சம்பளம் ரூ.2.05 லட்சம் வரை..!! டிஎன்பிஎஸ்சி-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Nov 11 , 2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு கல்விப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள Bursar பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியின் முழு விவரங்கள்… நிறுவனம் – தமிழ்நாடு அரசு […]

You May Like