நாம் தினசரி வாழ்வில் உண்ணும் பல உணவுகள் நம் உடலுக்கு சத்துக்களை தருவதோடு, ஒரு சில உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் ஒரு சில பழக்கவழக்கங்களை தினசரி செய்து வருவதால் நம் உடலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நோய் பாதிப்புக்கு உள்ளாகிறது. அவை என்னென்ன பழக்கங்கள் என்பதை குறித்து பார்க்கலாம்.
1. காபி – காலையில் எழுந்தவுடன் அனைவருக்கும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து முறை காபி குடிப்பது, இதுவே தினசரி பழக்கமாக தொடர்வது உடலுக்கு கேடு தரும். இது நரம்பு மண்டலத்தை பாதித்து தூக்கமின்மை, மனப்பதட்டம், கை கால் நடுக்கம் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2. மீன் எண்ணெய் மாத்திரைகள்- ஒரு சிலர் ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் எண்ணெய் மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவார்கள். அவ்வாறு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் ரத்த குறைவு ஏற்படும், பார்வை கோளாறு, வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றது
3. பழங்கள்- ஒரு சிலருக்கு உணவிற்கு முன்னும் பின்னும் பழங்களை உண்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இவ்வாறு அளவுக்கு அதிகமாக பழங்களை உண்பதன் மூலம் உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பல்வேறு பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்துகிறது.