fbpx

விஜயகாந்துக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க..? உண்மையை மறைத்துவிட்டார்கள்..!! மகன்கள் முன்பே பகீர் கிளப்பிய மன்சூர்..!!

விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னையில் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கமல்ஹாசன், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். மன்சூர் விஜயகாந்துக்கு நல்ல நண்பராக மாறினார். அவர் வீட்டு திருமணத்திற்கு கூட விஜயகாந்த் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அது போல் கேப்டன் இறந்தவுடன் கவலை தோய்ந்த முகத்துடன் அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தை விட்டு எங்கும் செல்லாமல் நீண்ட நேரமாக இருந்தார்.

விஜயகாந்த் குறித்து அவர் பேசுகையில், ”விஜயகாந்த் நிஜத்திலுமே மாமனிதனாக வாழ்ந்தவர். கேப்டன் உடல்நலம் மோசமான போதே நானெல்லாம் செத்து போய்ட்டேன். விஜயகாந்த் உடல்நலம் மோசமானதுக்கு என்ன ட்ரீட்மென்ட், என்ன ஏதுன்னு எந்த விவரமும் சொல்லப்படவில்லை. அதுல சில மன வருத்தங்கள் எனக்கு இருக்கு.

அதை பற்றி நான் இங்க பேசல. ஆனால், என்னால் தாங்க முடியவில்லை. அத்தனை வேதனையா இருக்கு என தெரிவித்திருந்தார். இது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாகியது. விஜயகாந்தின் மகன்களும் மனைவியும் அவரை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட நிலையிலும் அவர் குறித்து இப்படி பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

உங்கள் வீட்டு பீரோவை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும்..? தப்பி தவறி இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

Sat Jan 20 , 2024
பணம், நகை, உடைகளை வைப்பதற்காக நம் அனைவரது வீட்டிலும் பீரோ இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் மகாலட்சுமி தயார் அங்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம். பண வரவு அதிகரிக்க, செல்வ செழிப்புடன் வாழ நம் வீட்டு பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். பீரோவை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைப்பதால், பணம் விரையம் ஆகாமல் வரவு அதிகரிக்கும். அதாவது பீரோவின் கதவு […]

You May Like