நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் ஒரு முக்கிய பொருளாக வெங்காயம் இருக்கிறது. ஆனால், வெங்காய வகையிலேயே ஒரு வகை வெங்காயம் மிகவும் அபூர்வமானது என்று கூறப்படுகிறது. அதோடு இந்த வெங்காயம் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட வெங்காயம் தான் வெள்ளை வெங்காயம். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வெள்ளை வெங்காயம் மிக, மிக குறைவாகத்தான் விலைவிக்கப்படுகிறது. ஆகவே இந்த வெள்ளை வெங்காயம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது. இந்த வெள்ளை வெங்காயத்தை சாப்பிடுவதால், இரத்தத்தில், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வெள்ளை வெங்காயத்தில் இருக்கின்ற ப்ளவனாய்டு ஆக்சிடென்ட் ,புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும் ஒன்றாக இருக்கிறது. அதேபோல, இந்த வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமான பிரச்சனைகள் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது.
இந்த வெள்ளை வெங்காயத்தில் இருக்கின்ற புரதங்கள், உடலுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்த வெள்ளை வெங்காயத்தில் இருக்கின்ற பிரீபயாடிக்குகள், வயிற்றில் புழுக்கள் ஏற்படுவதை தடுக்கிறது.