fbpx

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு…! கல்வி இயக்குநர் உத்தரவு…!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா அமைப்பின் சார்பாக 1996 ஆம் ஆண்டு முதல் வெண்புள்ளிகள் நோயல்ல, பிறருக்கு தொற்றாது, பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை கருத்தரங்குகள், மனிதசங்கிலிகள், பேரணிகள், மாராத்தான்கள் என பல்வேறு வடிவங்களில் வெண்புள்ளிகள் உள்ளவர்களிடமும் பொதுமக்களிடமும் பரப்பி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 2023 இல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து, இன்று உறுதிமொழி எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. வெண்புள்ளிகள் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார் ‌

Vignesh

Next Post

நடிகர் விஜயின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா அண்ணாமலை....? விஜய் மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன....?

Wed Oct 11 , 2023
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்களை விமர்சித்து பேசியதை காரணமாக காட்டி, அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில், திடீரென்று வெளியேறியது. யாரும் எதிர்பாராத விதத்தில், நடைபெற்ற இந்த அரசியல் மாற்றம் காரணமாக, ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்து தான் போனது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக டெல்லிக்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவின் தேசிய தலைமையை சந்தித்து, தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் இந்த […]

You May Like