fbpx

சைக்கிள் கேப்ல கட்சிக்குள்ள வந்தது யாரு, வளர்ந்தது யாரு?… சரவெடி வெடிக்கும் காயத்ரிரகுராம்…!!

தமிழக பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் நிலையில் காயத்ரி ரகுராமின் பதிவுகள் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. மேலும் கட்சி நிர்வாகிகளை கண்டிக்கின்றேன் என்ற பெயரில், காயத்ரி ரகுராம் பல விஷயங்களை உளறியுள்ளார்.

பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளதால் டுவிட்டரில் பல தகவல்களை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மூத்த நிர்வாகிகளை அவமதிப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

கட்சியில் இத்தனை வருடமாக ஒரு பெண்ணாக இருந்தும் எனக்கு எதிராக பா.ஜ.க.வினர் சிலர் மோசமாக போஸ்ட் செய்கின்றனர். செல்வகுமார் ஆகியோர் எனக்கு எதிராக டுவீட் செய்தவதற்கு பணம் கொடுத்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்த அவர் டுவீட்டில், சில சமயங்களில் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கின்றதா என்று எனக்கு சந்தேகம் வரும். என்னைப்பற்றியும் என் வேலையைப் பற்றியும் நான் வருத்தப்பட்டேன் என சொன்னதற்காக ட்ரோல் செய்யப்பட்டேன். அதுவும் ஒரு விசுவாசி குழு பெரும்பாலும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே’’ என தெரிவித்துள்ளார்.

என்ன மோதல்? காசியில் நடந்த காசி சங்கம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இங்குதான் மோதல் தொடங்கியதுஎன்று கூறப்படுகின்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவர்கள் சென்ற நிலையில் இவருக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படகின்றது. இதனால் தனக்கு மதிப்பில்லை, மூத்தவர்களை மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே பா.ஜ.க. ஆதவு ஐடியில்இருந்து காயத்ரி பெயர் குறிப்பிடாமல் அவரை விமர்சித்துள்ளது. அதில் டுவிட்டரில் 4 ஃபாலோவர்கள் வைத்துக் கொண்டு பி.எம். ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு… தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதல் படி இருந்தா இரு இல்லைனா மானாட மயிலாட போய் கொரியோகிராபர் வேலைய பாரு என விமர்சனம் செய்துள்ளார்.

இதைஎதிர்த்து காயத்ரி போட்ட போஸ்ட்தான் கலக்கி வருகின்றது. என்னை வெளியே போனு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு லைக்குகள் பெறுவதற்கும் காசு கொடுத்துள்ளவர்கள் வழக்கம் போல 4,000 லைக் போடுங்கள் பணம் பெறவில்லை என்றால் நீங்கள் வழக்கம் போல போய் அந்த பக்கத்திற்கு லைக்ஸ் போடுங்க என உளறி கொட்டியுள்ளார். மறைமுகமாக அண்ணாமலையை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சைக்கிள் கேப்ல யார் வந்தது?. நான் 8 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். யார் சைக்கிள் கேப்ல வந்து பெரிய ஆள் ஆனது எனவும் அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Post

#Alert..!! 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!! தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

Mon Nov 21 , 2022
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (21.11.2022) காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் […]

You May Like