தன்னுடைய சித்தியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவனை கண்டித்த மனைவி..
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், கோவிலில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார் சுவாமிநாதன். இவருடைய மனைவி சுதா, இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. சமீப காலமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் சுவாமிநாதன் தன்னுடைய மனைவியின் சித்தியுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது, அதோடு, இது தொடர்பாக அறிந்த சுதா, தன்னுடைய சித்தியுடன் கள்ளத்தொடர்பை விட்டு விடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், சுவாமிநாதன் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மனைவியின் மீது கோபமுற்று, அவரை அடித்துள்ளார். இதனால், கடுமையான ஆத்திரத்துக்கு ஆளான சுதா, நேற்று சுவாமிநாதன் வீட்டிலிருந்தபோது காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, உடலில், கழுத்து, மார்பு, கை, தோள்பட்டை உள்ளிட்ட பதினைந்து இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதன் காரணமாக, இரத்த வெள்ளத்தில், துடிதுடித்துக் கீழே விழுந்த சுவாமிநாதன், உடனடியாக அண்ணாமலை நகர் பகுதியில் இருக்கின்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுவாமிநாதன் வழங்கிய புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கணவரை வெட்டிய சுதாவின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.