fbpx

#கிண்டி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..! 

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40). இவர் கிண்டியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான பாபநாசத்தில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் அதே நகரை சேர்ந்த வீரபத்ரன் (40). இவருடன் சங்கரின் மனைவி கோமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சங்கர் தனது மனைவிக்கு போன் செய்து கள்ள உறவு குறித்து எச்சரித்துள்ளார்.  இதையடுத்து வீரபத்திரனுடனான உறவை சங்கரின் மனைவி முடித்து வைத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த வீரபத்திரன், கடந்த 25ம் தேதி தென்காசியில் இருந்து சென்னை வந்து, சங்கர் பணிபுரியும் இடத்திற்கு சென்று, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வீரபத்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரை சரமாரியாக வெட்டினார். 

இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். அதன்பின், தப்பியோட முயன்ற வீரபத்ரனை அங்கிருந்தவர்கள் பிடித்து கிண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து பின்னர் உடலை மீட்டனர். 

பிரேத பரிசோதனைக்கு பின், போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையில் ஈடுபட்டாரா என விசாரித்தனர். கிண்டி போலீசார், அவரது மனைவி கோமதியை, கிண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வர, திருநெல்வேலி சென்றனர். கொலைக்கு கணவர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Baskar

Next Post

உச்சக்கட்டம்..!! விதவை பெண்ணின் தலையை வெட்டி தோலை அகற்றிய கொடூரம்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

Fri Dec 30 , 2022
40 வயது விதவை பெண்ணின் தலையை வெட்டி தோலை உறித்தெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று முன்தினம் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”40 வயது விதவை கொடூரமான முறையில் […]
உச்சக்கட்டம்..!! விதவை பெண்ணின் தலையை வெட்டி தோலை அகற்றிய கொடூரம்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like