சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “ 2025-ம் ஆண்டுக்குள், இந்தியா வங்கதேசத்தை விட ஏழ்மையான நாடாக மாறும்.. இது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சி.. மோடி, இந்தியாவின் எதிர்காலத்தை ஆபத்தில் வைத்துள்ளார்.. இந்தியா இனி வளரும் நாடாக இருக்காது. என்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் இந்த செய்தி போலியானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. இந்திய பத்திரிக்கை தகவல் பணியகமான PIB இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.. அந்த பதிவில் “ சர்வதேச நாணய நிதி இது போன்ற எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.. அது போலியான தகவல்.. உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள போதிலும், இந்தியா இன்றைய உலகில் சிறப்பாக உள்ளது.. கொரோனா பெருந்தொற்றில் தாக்கத்தில் இருந்து இந்தியா முன்னேறி, வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார்..” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் வந்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம்.. அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதை சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு அந்த செய்தியை அனுப்ப வேண்டும். நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற WhatsApp எண்ணுக்கு செய்தியை அனுப்பலாம். அதே போல் உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலை https://pib.gov.in என்ற இணையதளத்திலும் சரிபார்க்கலாம்..