fbpx

அற்ப சுகத்திற்கு 14 வயது மகள் கொலை.! தாய்க்கு ஆயுள் தண்டனை.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

ஊட்டியில் தகாத உறவிற்கு இடையூறாக இருந்த மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது.

ஊட்டியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. இவரது கணவர் இறந்த நிலையில் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனிமையில் இருந்த அவருக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் ராஜலட்சுமி தனது கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகுவதற்கு அவரது 14 வயது மகள் இடையூறாக இருப்பதாக நினைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜலட்சுமி மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இது தொடர்பாக சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை விசாரித்த நீதிபதி இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜலட்சுமி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பொங்கல் நெருங்கியாச்சு பரிசு தொகுப்பு என்னாச்சு.? தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி.?

Sun Dec 31 , 2023
நாளை புது வருடம் பிறக்க இருக்கின்ற நிலையில் பொங்கல் பண்டிகைக்காண பரிசுத்தொகுப்புகளின் விபரம் என்னானது என கேள்வி எழுப்பி இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிக்கை வெளியிட்ட அவர் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டங்களை […]

You May Like