fbpx

1 இல்ல 2 இல்ல 4வது கல்யாணம்.! பணத்திற்காக பெண் செய்த வேலை.! காவல்துறை வலைவீச்சு.!

கர்நாடக மாநிலத்தில் பணத்திற்காக இளம் பெண் ஒருவர் 4 பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசாந்த் என்ற இளைஞரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் தான் கருவுற்று இருப்பதாக கணவரிடம் கூறிய அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்கு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாகியும் அந்த பெண் திரும்ப வராததால் இது தொடர்பாக பிரசாந்த் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் பல சம்பவங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. குறித்த பெண் ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்துள்ள நிலையில் மூன்றாவதாக பிரசாந்தை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் இவர் நான்காவது ஒரு இளைஞரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

திருமணமான அனைத்து நபர்களிடமும் பணம் மற்றும் வசதிகளை அனுபவித்துவிட்டு அதன் பிறகு அவர்களிடம் இருந்து தலைமறைவாகி வேறொரு நபரை திருமணம் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

இனி சூப்பர் தான்.! பாஸ்போர்ட்வாங்குறது ரொம்ப ஈசி.! சென்னையை சுற்றி 4 இடங்களில் தட்கல் பாஸ்போர்ட் அறிமுகம்.!

Sat Dec 30 , 2023
ஒரு நாட்டின் குடிமகன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒரு ஆவணம் ஆகும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படச் சான்றுகளிலும் பாஸ்போர்ட் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஒருவருக்கு பாஸ்போர்ட் தேவை என்றால் அவர் பாஸ்போர்ட் அலுவலகங்களில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட் விண்ணப்பித்த தேதியிலிருந்து 30 முதல் 45 நாட்களுக்குள் நமது முகவரியில் நேரடியாக கிடைத்து விடும். ரயில்வேக்கு தட்கல் டிக்கெட் இருப்பதைப் போலவே பாஸ்போர்ட் […]

You May Like