fbpx

கள்ளக்காதல் பண விவகாரம்.! காதலனை கொலை செய்து காதலி தற்கொலை.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை.!

கேரள மாநிலம் வயநாட்டில் கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட பண பிரச்சனையில் காதலனை கொலை செய்துவிட்டு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் குட்டப்பன் இவரது மனைவி சந்திரமதி(54). குட்டப்பன் தனது மனைவி சந்திரமதியை 20 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற நிலையில் சந்திரமதி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.

இந்நிலையில் சந்திரமதிக்கும் முகமது மீரான்(58) என்பவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பல தொழில்களில் செய்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்குமிடையே பணம் தொடர்பான தகராறு இருந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து சந்திரமதியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார் முகமது மீரான்.

அப்போது இருவருக்குமிடையே பணம் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சந்திரமதி மீரானின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு வீட்டின் பின்புறத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெளியே சென்று இருந்த சந்திரமதியின் தாய் தேவகி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மீரான் மற்றும் சந்திரமதி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

காதலியுடன் ஓட்டம் பிடித்த மகன்..!! தாயை நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டி வைத்த பெண்ணின் குடும்பத்தினர்..!!

Tue Dec 12 , 2023
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யவிருந்த பெண்ணுடன் அவரது மகன் ஓடிப்போனதால், அவரது தாய் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இளம்பெண் தன் காதலனுடன் ஓடிப்போனதை அறிந்த அவரது குடும்பத்தினர், புது வந்தமுரி கிராமத்தில் உள்ள அந்த பையனின் வீட்டை தேடிச் சென்று தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் இளைஞரின் […]

You May Like